தீ விபத்தினால் 18 வீடுகள் முற்றாக எரிந்து அழிந்துள்ளது

தஞ்சை மேட்டு எல்லையம்மன் கோவில் தெரு பகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தினால் 18 வீடுகள் முற்றாக எரிந்து அழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தெருவில் மிகவும் நெருக்கமாக சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில் இன்று ஒரு வீட்டின் கூரையில் பற்றிய தீ ஏனைய இடங்களுக்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வீடுகளின் எரிவாயு சிலிண்டர்களும் வெடித்தமையினால் வேகமாக பரவிய தீபரவலைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாகவும் பின்னர் அங்கு வந்த தீயணைப்பு படையினர் சுமார் 2½ மணி நேரம் பேராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தீவிபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Sharing is caring!