துணைத் தலைவராகிட்டார் தேர்தல் வியூக நிபுணர்

பாட்னா:
துணைத் தலைவராகிட்டார்… துணைத் தலைவராகிட்டார் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்.

தேர்தல் வியூக நிபுணர் என்றழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர், நிதிஷ் குமாரின் ஜக்கிய ஜனதா தள கட்சி துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர். அரசியல் கட்சிகள், தேர்தல்களில் வெற்றி பெறும் வகையில், திட்டங்களை வகுத்து கொடுப்பதுடன், பிரசாரத்தை ஒருங்கிணைப்பதில் கில்லாடி என பெயர் பெற்றவர்.

கடந்த 2012-ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலின் போதும், 2014 லோக்சபா தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பா.ஜ., ஆட்சியை பிடிக்க கிஷோர் பணியாற்றினார். பின்னர் பீஹார் சட்டசபை தேர்தலில், நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்காக பணியாற்றி, வெற்றியை தேடிக் கொடுத்தார்.

கடந்த மாதம் நிதிஷ் குமார் முன்னிலையில், ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார். இதுகுறித்து ஐக்கிய ஜனதா தள கட்சி செய்தி தொடர்பாளர் கே.சி.தியாகி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பிரசாந்த் கிஷோர் கட்சியின் நம்பிக்கைக்குரியவராக இருந்து வருவதால் எதிர்காலத்தில் நடக்க உள்ள பார்லி. லோக்சபா, மற்றும் சட்டசபை தேர்தல்களில் வெற்றி வியூகம் வகுத்திடவே கட்சியின் துணை தலைவராக நியமிக்கப்பட்டார் என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!