துணை முதல்வர் பெயரை சொல்லி மோசடி செய்த வாலிபர் கைது

சென்னை:
துணை முதல்வர் பெயரை சொல்லி வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை நீலாங்கரை பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார்.  டிப்டாப்பாக உடையணிந்து சுற்றிய இவர் தனக்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தையும், அவரது மகனையும் நன்றாக தெரியும் என்று பலரிடமும் கூறி வந்தார்.

இதை நம்பிய பலர் அரசு வேலை பெற அவரை அணுகி உள்ளனர். இதையடுத்து அரசு வேலை நிச்சயம் வாங்கி தருவதாக கூறி 20க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.1 கோடி வரை பணம் வாங்கி உள்ளார் சரவணகுமார். ஆனால் சொன்னபடி வேலை வாங்கித்தரவில்லை. பணத்தையும் திரும்ப தரவில்லை.

இதனால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் நீலாங்கரை போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் சரவணகுமார் ஓபிஎஸ் பெயரை சொல்லி மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!