துணை முதல்வர் மீதுதான் முதல் அதிருப்தி… கோர்ட்டில் தகவல்

சென்னை:
துணை முதல்வர் ஓ.பி.எஸ். மீதுதான் முதல் அதிருப்தி. முதல்வர் மீது இல்லை என்று தினகரன் தரப்பு வக்கீல் தெரிவித்துள்ளார்.

18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராமன் வாதாடினார். அதில் ஓ.பி.எஸ் மீதுதான் முதல் அதிருப்தி. முதல்வர் மீது இல்லை. தமிழக அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ,பி,எஸ் அணி மீது நடவடிக்கை இல்லை என்பதே முதல் குற்றச்சாட்டு.

முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்பது எங்களுக்கு இரண்டாவது பட்சம் தான். நாங்கள் சந்தி்த்த அதே நாளில் தி.மு.க.வும் கவர்னரை சந்தித்ததற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. ஆட்சிக்கு எதிராக வாங்களி்ப்போம் என நாங்கள் ஒரு போதும் சொல்லவில்லை.

ஆட்சிக்கு எதிராக செயல்படுகிறோம் என முதல்வர் சொல்லவில்லை. சபாநாயகர் தான் சொல்கிறார். தி.மு.க.வுடன் சேர்ந்து ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கிறோம் எனவும் சபாநாயகர் தான் சொல்கிறார். இவ்வாறு முதல் வாதம் நேற்று முடிந்தது. இதையடுத்து இந்த வழக்கு இன்று நடக்கிறது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!