துயரத்தை துணிவுடன் கூறுபவர்களை பாராட்டுகிறேன்… ராகுல் டுவிட்
புதுடில்லி:
தங்களுக்கு நடந்த துயரத்தை துணிவுடன் வெளியே கூறும்பவர்களை பாராட்டுகிறேன். உண்மை உரக்கச் சொல்லப்பட வேண்டும். இது மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று காங்., தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். எதற்காக தெரியுங்களா?
பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதை வெளியே சொல்லாமல் , சமூகவலை தளங்களில், மீடூ இயக்கத்தின் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட நிலையை பல பெண்கள் கூறிவருகின்றனர். அதன்படி, நடிகர் நானா படேகர், மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் உள்ளிட்டோர் மீது பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் ‘மீடூ’ தொடர்பாக தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”பெண்கள் சுயமரியாதையுடனும், நன்முறையிலும் நடத்தப்பட வேண்டும் என்பதை இதன் மூலம் ஒவ்வொருவரும் பாடம் கற்றுக் கொள்ள முடிகிறது.
தங்களுக்கு நடந்த துயரத்தை துணிவுடன் வெளியே கூறும்பவர்களை பாராட்டுகிறேன். உண்மை உரக்கச் சொல்லப்பட வேண்டும். இது மாற்றத்தை கொண்டு வர வேண்டும்”. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நன்றி– பத்மா மகன், திருச்சி