துளியும் அதிமுகவுக்கு பாதிப்பு இருக்காது… அமைச்சர் சொல்றார்

சென்னை:
துளியும் பாதிப்பு இருக்காது… இருக்காது என்று அமைச்சர் சொல்லியிருக்கார். என்ன விஷயம் தெரியுங்களா?

நடிகர்கள் கமலும், ரஜினியும் கட்சித் துவங்குவதால் அ.தி.மு.க.,வுக்கு துளியும் பாதிப்பு இருக்காது. இருவரும், அ.தி.மு.க.,வின் ஓட்டுக்களை ஒரு நாளும் பெற முடியாது. அதனால், அவர்களது இருவர் குறித்து அ.தி.மு.க., ஒரு நாளும் கவலைப்படாது. ரஜினியின் அரசியல் நுழைவால் பாதிக்கப்படப் போவது தி.மு.க.,தான்.

அந்தக் கட்சியின் ஓட்டுக்களைத்தான் ரஜினி பிரிப்பார். அதோடு, நடிகர் ரஜினி டி.வி., துவங்கப் போவதாக தெரிகிறது. அப்படி அவர் டி.வி., துவங்கினாலும், பாதிப்பு தி.மு.க.,வுக்குத்தான். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!