தூதரகத்தை இடம் மாற்ற பிரேசில் அதிபர் முடிவு
ரியோ டி ஜெனிரோ:
தூதரகத்தை இடம் மாற்ற முடிவு செய்துள்ளது பிரேசில் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இஸ்ரேலில் உள்ள தங்கள் நாட்டு தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்ற பிரேசில் நாட்டு அதிபர் முடிவு செய்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வரும் டிசம்பர் மாதம் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக தெரிவித்தார்.
அத்துடன் தனது தூதரகத்தை ஜெருசலேமிற்கு மே மாதம் மாற்றினார். தொடர்ந்து கவுதமாலா மற்றும் பராகுவே ஆகிய நாடுகள் தங்களது தூதரகத்தை ஜெருசலேமிற்கு மாற்றின.
இந்நிலையில் பிரேசிலில் நடந்த அதிபர் தேர்தலில் புதிய அதிபராக ஜயிர் போல்ஸ்னோரோ வெளியிட்ட அறிவிப்பில், இஸ்ரேலில் உள்ள பிரேசில் தூதரகம் டெல் அவிவ் நகரில் இருந்து ஜெருசலேம் நகருக்கு மாற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பிரேசில் அதிபரின் இந்த முடிவு வரலாற்று சிறப்புமிக்க முடிவு என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகூ பாராட்டு தெரிவித்துள்ளார்.
நன்றி– பத்மா மகன், திருச்சி