தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்… சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை

தூத்துக்குடி:
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர் இன்ஸ்பெக்டர்களிடம்.

ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இன்ஸ்பெக்டர்களிடம் இன்று சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர் லைட் ஆலையை மூட வலியுறுத்தி கலவரம் நடந்தது. கலவரத்தின் போது நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.

பலர் காயம் அடைந்தனர். இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது பணியில் இருந்த இன்ஸ் பெக்டர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!