தூய்மையே சேவை… புதுச்சேரி முதல்வருக்கு பிரதமர் பாராட்டு
புதுடில்லி:
புதுச்சேரி முதல்வருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். எதற்காக தெரியுங்களா?
புதுச்சேரியில் ‘துாய்மையே சேவை’ திட்டத்தை துவக்கி வைத்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, வேட்டியை மடித்துக்கட்டி, திடீரென கழிவு நீர் கால்வாயில் இறங்கி, மண்வெட்டியால் துார்வாரி சுத்தம் செய்தார்.
இச்செயலுக்காக நாராயணசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளதாவது:
‘துாய்மை இந்தியா’ திட்டத்தை வலுசேர்க்கவும், அனைவருக்கும் உத்வேகம் தரும் வகையிலும், முன்னுதாரணமாக திகழ்ந்த நாராயணசாமிக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S