தென்னங்கன்று வைக்க குழி தோண்டல்… பிரம்மா சிலை கண்டெடுப்பு
தஞ்சாவூர்:
தென்னங்கன்று வைக்க குழி தோண்டிய போது பிரம்மா சிலை கிடைத்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அடுத்த வீரசிங்கம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜராஜன் (33). இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில், புதிதாக தென்னங்கன்று நடும் பணிகள் நடந்து வருகிறது.
இதற்காக பொக்லைன் மூலம் குழி தோண்டும் பணி நடந்த போது, நிலத்தில் ஒரு சிலை புதைந்து கிடப்பது தெரிய வந்தது. குழியை அகலப்படுத்தி, சிலையை வெளியே எடுத்த போது, நான்கு முகங்களுடன், 5 அடி உயரத்தில் கருங்கலால் வடிமைக்கப்பட்ட பிரம்மா சிலை என்பது தெரிந்தது.
உடனே, வருவாய் துறை அதிகாரிகள், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு திரண்ட கிராம மக்கள், சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், சிலையை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி- பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S