தென்மேற்கு பருவமழை 12 சதவீதம் குறைவாக பெய்துள்ளது

சென்னை:
தென் மேற்கு பருவமழை இயல்பை விட 12 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில் தென் மேற்கு பருவமழை இயல்பை விட 9 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. நாட்டின் 27 மாநிலங்களில் இயல்பான மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் இயல்பை விட 12 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. கேரளாவில் இயல்பை விட 24 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. தமிழகம், கேரள மாநிலங்களில் 4 அல்லது 5 நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையை ஒட்டிய பகுதியில் உள்ள மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வரும் 6ம் தேதி வலுப்பெறும் எனத் தெரிவித்துள்ள இந்திய வானிலை மையம், அரபிக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.

கடலுக்குள் சென்ற மீனவர்கள் 6ம் தேதிக்குள் கரைக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!