தென் அமெரிக்காவின் பெரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் கெய்கோ புஜிமோரி (Keiko Fujimori) கைது

தென் அமெரிக்காவின் பெரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் கெய்கோ புஜிமோரி (Keiko Fujimori) கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் பெருவின் முன்னாள் ஜனாதிபதி அல்பேட்டோ புஜிமோரியின் மகளாவார்.

பெரு காங்கிரஸின் எதிர்க்கட்சித் தலைவரான கெய்கோ புஜிமோரி, அவரது கணவருடன் சேர்த்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பிரேஸில் நிறுவனமான ஒடெப்ரெக்ட்டில் (Odebrecht) தனது கட்சிக்கான சட்டவிரோத பங்களிப்பை ஏற்றுக்கொண்டதில் கெய்கோவிற்கும் தொடர்பிருப்பதாக சட்டத்தரணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஆனால், குற்றச்சாட்டுகளை கெய்யோ மறுத்துள்ளார்.

Sharing is caring!