தென் ஆப்ரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியது
தென் ஆப்பிரிக்கா பிரிட்டோரியா நகரில் சிறிய ரக பயணிகள் விமானம் ஒண்டர்பூம் விமான நிலையம் அருகே வந்தபோது திடீரென விமானி கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் அவசரமாக தரையிறக்க முயற்சி செய்தார். ஆனால் அதற்குள் விமானம் அந்தரத்தில் இருந்து தரையில் விழுந்து நொறுங்கியது.
இதில் விமானத்தின் என்ஜின், வால் பகுதி சேதமடைந்தது. அந்த பகுதியை கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று விபத்தில் சிக்கிய 19 பேரை மீட்டனர். காயம¬ந்த அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். என்ஜின் கோளாறு காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S