தென் மாவட்டங்களில் பரவலாக மழை… மக்கள் மகிழ்ச்சி

மதுரை:
தென்மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையல் தென் மாவட்டங்கள் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது.

மதுரையில் கன மழை பெய்தது. மதுரையில், திருப்பரங்குன்றம், பெரியார் பஸ் நிலையம், அண்ணாநகர், மாட்டுத்தாவணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது.

கடந்த நான்கு நாட்களாக லேசான சாரல் மழை பெய்தது. இந்நிலையில் நேற்று பெய்த கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர்,பூலுவபட்டி மற்றும் டவுன்ஹால் பகுதிகளில் மழை பெய்தது.

சிவகங்கை மாவட்டம் திருப்புத்துாரில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதகளிலும் மழை பெய்தது. தேனி மாவட்டம் பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!