தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை:
கர்நாடகாவில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் தென் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாம்.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

மாலத்தீவில் இருந்து கர்நாடகாவின் உள்பகுதி வரை காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுகிறது. இதனால், தென் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!