தெருக்களில் கிடந்த பாலிதீன் பைகள் சேகரித்து அழிப்பு

வேடசந்துார்:
தெருக்களில் கிடந்த பாலிதீன் பைகள் சேகரிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

வேடசந்துார் அருகே உள்ள வைவேஸ்புரத்தில், சாணார்பட்டி அப்துல் கலாம் சேவை மையம் சார்பில், தெருக்களில் கிடந்த பாலிதீன் பைகளை சேகரித்து எரித்தனர்.

மேலும் கிராம மக்களிடம் வீடு வீடாக சென்று பாலிதீன் உபயோகத்தால் ஏற்படும் தீங்குகள் குறித்து எடுத்துக் கூறினர். இந்த முகாமில், சேவை மையத்தின் செயலாளர் முருகன், துணை செயலாளர் ராமசாமி, நிர்வாகி விமல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!