தெரேசா மேயினுடைய பிரெக்ஸிட் உடன்படிக்கையானது, அமெரிக்க – பிரித்தானிய வர்த்தக ஒப்பந்தத்துக்கு அச்சுறுத்தல்

பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயினுடைய பிரெக்ஸிட் உடன்படிக்கையானது, அமெரிக்க – பிரித்தானிய வர்த்தக ஒப்பந்தத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வௌியேறும் உடன்படிக்கையானது, அந்த அமைப்பிற்கு சிறந்தது எனக் கருத்துக்கள் வௌியிடப்பட்டாலும், பிரித்தானியாவுக்கு தமது நாட்டுடன் வர்த்தகம் மேற்கொள்ள முடியாமற்போகும் நிலை தோன்றலாம் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியா உலகளாவிய ரீதியில் எந்த நாட்டுடனும் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியுமென பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் மிகத் தௌிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், வௌ்ளை மாளிகைக்கு வௌியே ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தற்போது குறித்த ஒப்பந்தத்தை எடுத்துப்பார்த்தால் கூட, பிரித்தானியாவுக்கு தமது நாட்டுடன் வர்த்தகம் எதனையும் மேற்கொள்ள முடியாமல் போகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இதுவொரு நல்ல செயற்பாடு அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!