தெலுங்கானா சட்டசபைக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

தெலுங்கானா:
தெலுங்கானா சட்டசபைக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. வரும் 13ம் தேதி யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்று தெரிந்து விடும்.

தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் தனது ஆட்சியின் முழு ஐந்தாண்டு காலம் முடிவதற்குள் தனது அமைச்சரவையை ராஜினாமா செய்தார். இதனால் அம்மாநிலத்தில் சட்டசபை கலைக்கப்பட்டு டிசம்பர் 7ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் 119 தொகுதிகளில் உள்ளன. இந்த தொகுதிகளில் மொத்தம் 1,821 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் ஒருவர் திருநங்கை ஆவார்.

இன்று நடைபெறும் வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடையும், ஆனால் நக்சலைட் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் மட்டும் மாலை 5 மணிக்கு பதில் 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இம்மாநிலத்தில் சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி கூட்டணியும், தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியும் மோதுகின்றன. வரும் 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அன்று தெரிந்து விடும் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்று.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!