தெலுங்கானா சட்டசபையை கலைக்க முடிவு… அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

ஐதராபாத்:
முடிவு செஞ்சுட்டாங்க… செஞ்சுட்டாங்க… சட்டசபையை கலைக்க முடிவு செஞ்சுட்டாங்க என்று தெரிய வந்துள்ளது.

தெலுங்கானா சட்டசபையை கலைக்க அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டசபையை கலைப்பது தொடர்பாக கவர்னருக்கு அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.

மாநில பிரச்னை காரணமாக தெலுங்கானா சட்டசபையை கலைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவை பரிந்துரையை முதல்வர் சந்திர சேகர ராவ், கவர்னர் நரசிம்மனிடம் நேரில் அளித்துள்ளார்.

இதை ஏற்று கொண்ட கவர்னர், புது அரசு அமையும் வரை காபந்து அரசாக நீடிக்குமாறு சந்திரசேகர ராவிடம் கேட்டு கொண்டார்.
தற்போது நடைபெற்று வரும் சந்திர சேகர ராவ் தலைமையிலான ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஆட்சி பதவி காலம் 2019 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை உள்ளது.

இந்நிலையில் முன்கூட்டியே தேர்தல் நடத்த சந்திரசேகர ராவ் கோரிக்கை வைத்துள்ளார். மாநில பிரச்னையை முன்வைத்து தேர்தலை சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

தெலுங்கானா அரசை கலைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் சட்டீஸ்கர், ம.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தல்களுடன் தெலுங்கானாவிற்கும் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!