தேர்தலில் தனித்து போட்டி… ஒமர் அப்துல்லா தகவல்
ஸ்ரீநகர்:
தேர்தலை தனித்தே சந்திப்போம் என்று தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் பி.டி.பி., பா.ஜ. கூட்டணி முறிந்ததைடுத்து அங்கு சட்டசபை முடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த நவம்பரில் பி.டி.பி. காங்., தேசிய மாநாட்டு கட்சி என மூன்று கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முயற்சித்தது.
இந்த முயற்சி தோல்வியடைந்ததையடுத்து சட்டசபையை கவர்னர் சத்யபால் மாலிக் கலைத்தார். இந்நிலையில் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா கூறியதாவது:
வரும் காஷ்மீர் சட்டசபை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி தேர்தலுக்கு முன்பாக யாருடன் கூட்டணி வைக்காது, தேர்தலை தனித்தே சந்திக்கும் என்றார். கடந்த நவம்பரில் ஆட்சிக்காக பி.டிபி. கட்சியுடன் கைகோர்த்து ஏன் என நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு மாநிலத்தையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றவே பி.டி.பி.யுடன் கைகோர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்றார்.
நன்றி– பத்மா மகன், திருச்சி