தேர்தலில் தலையீடு செய்ததாக பெண்மீது குற்றச்சாட்டு

அமெரிக்காவில் நவ. 6-ல் நடைபெறவுள்ள தேர்தலில் தலையீடு செய்தது தொடர்பாக ரஷ்யப் பெண் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்தவர் எலீனா அலெக்ஸீவ்னா கஷ்யநோவா. இவர், 2018ல்- நடைபெறவுள்ள அமெரிக்க தேர்தலில் வெளிநாட்டு நிதி உதவியை தவறாக பயன்படுத்தி, ஊடகங்கள் மூலம் பொதுமக்களின் கருத்துகளை திசை திருப்புவதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதேபோன்ற உத்தியைத்தான் 2016-ல் நடந்த அமெரிக்க தேர்தலின் போதும் கடைபிடித்ததாக ரஷ்யா மீது ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் தேர்தலில் தலையிட்டது தொடர்பாக ரஷ்யப் பெண் எலீனா மீது அமெரிக்க கிரிமினல் குற்றச்சாட்டை கூறி வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வழக்கறிஞர்கள் கூறுகையில், ‘குடியேற்றம் மற்றும் துப்பாக்கி கட்டுப்பாட்டு விவகாரங்களில் அமெரிக்க அரசியல் கட்சி வேட்பாளர்கள் மீது அவநம்பிக்கையை உண்டாக்கும் வகையில் ரஷ்ய சமூக ஊடகங்கள் மூலமாக எலீனா பொய் பிரசாரங்களை மேற்கொண்டார்.

மேலும், இதற்கு மறைமுகமான முறையில் அவர் வெளிநாடுகளிலிருந்து நிதி திரட்டினார்’ என்றனர்.இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் செர்கி ரியாப்கோவ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’ரஷ்யா மீது மேலும் தடைகளை விதிப்பதற்கு அமெரிக்கா இன்னொரு ஒரு காரணத்தைத் தேடி கண்டுபிடித்துள்ளது.

2018 தேர்தலில் ரஷ்யா தலையீடு என்பது எப்போதும்போல் அமெரிக்காவின் ஜோடிக்கப்பட்ட மற்றுமொரு கதை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!