தேர்தலுக்கு முன்பே தொடங்கும்…. அமித்ஷா அறிவிப்பு

ஐதராபாத்:
தொடங்கும்… தொடங்கும்… லோக்சபா தேர்தலுக்கு முன்பே தொடங்கும் என்று அமித்ஷ அறிவித்துள்ளார். என்ன விஷயம் தெரியுங்களா?

2019-ம் ஆண்டு பார்லி.லோக்சபா தேர்தலுக்கு முன்பாக ராமர் கோயில் கட்டும் பணி துவங்கும் என பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா கூறினார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் வந்த அமித்ஷா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் கூறியதாவது: தெலுங்கானாவில் பா.ஜ.வை வலுப்படுத்துவதற்காக இங்குள்ள நிர்வாகிகள் கட்சி பணியில் தீவிரம் காட்டிவருகின்றனர். 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்பாகவே அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி துவங்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!