தேர்தல் அதிமுகவுக்கு சர்க்கரை போன்றது… அமைச்சர் சொல்றார்

சென்னை:
தேர்தல் என்பது அதிமுகவிற்கு சர்க்கரை போன்றது. திருவாரூர் இடைத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும். தேர்தல் என்பது அதிமுகவிற்கு சர்க்கரை போன்றது. சிலருக்கு பாகற்காய் போன்றது. ஒரு காலத்தில், சென்னை திமுகவின் கோட்டையாக இருந்தது. ஆனால், இன்றைய நிலை என்ன.

தமிழக அரசின் முயற்சியால், புத்தாண்டு பரிசாக 23 பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. 32 இஞ்ச் டிவி உள்ளிட்ட வசதி படைத்தவர்கள் வாங்கும் பொருட்களுக்கு தான் 28 சதவீத ஜிஎஸ்டியில் உள்ளது.

ஜெயலலிதா மரண விவகாரத்தில், அமைச்சர் சண்முகத்தின் கருத்தை உதாசீனப்படுத்த முடியாது. சம்பந்தப்பட்டவர்கள் வாக்குமூலம் பெறுவது ஒருபுறம். போலீஸ் விசாரணை மறுபுறம். போலீஸ் விசாரணை எப்படி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். கவனிக்க வேண்டிய விஷயத்தில் கவனித்தால் உண்மை வெளிவரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!