தேர்தல் கமிஷனரை சந்தித்தது எதற்காக? விளக்கம் அளித்த மத்திய அமைச்சர்

புதுடில்லி:
மேற்குவங்கத்தை மிகவும் பதற்றமான மாநிலமாக அறிவிக்கக் கோரி தேர்தல் கமிஷனிடம் மனு அளித்துள்ளோம் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

பா.ஜ., சார்பில் மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர் தலைமை தேர்தல் கமிஷனரை சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரவிசங்கர் பிரசாத், தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்தித்தது ஏன் என விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மேற்குவங்கத்தை மிகவும் பதற்றமான மாநிலமாக அறிவிக்கக் கோரி தேர்தல் கமிஷனிடம் மனு அளித்துள்ளோம். மேற்குவங்கத்கத்தில் அனைத்து அரசு இயந்திரங்களும் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. வன்முறைக்கு பெயர் போனது மேற்குவங்கம். அதனால் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் மத்திய ரிசர்வ் படை போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம்.

மேற்குவங்கத்தில் பஞ்சாயத்து, உள்ளாட்சி அமைப்புக்கள் என அனைத்தும் மோசமான நிலையில் உள்ளன. மேற்கு வங்கத்தில் உள்ளாட்சி தேர்தலின் போது நடந்த வன்முறையில் 100 பேர் வரை கொல்லப்பட்டனர். இதனால் தேர்தல் கண்காணிப்பாளர் ஒருவரை நியமிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளோம்.

பிரதமர் மோடி மீது ராகுல் ஆதாரமற்ற தவறான குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். தேர்தல் விதிகளை மீறி அவர் பேசி வருகிறார். ரபேல் விவகாரத்தில் மோடி மீது அவதூறான கருத்துக்களை ராகுல் கூறி வருகிறார். இதனால் ராகுல் மீது முறைப்படி புகார் அளித்துள்ளோம். ராகுல் மீது நடவடிக்கை எடுக்கவும் கேட்டுள்ளோம்.

ஏற்கனவே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்ட நிலையில் நேற்று ஆமதாபாத்தில் பேசிய ராகுல், பிரதமர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார் என்றார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!