தேர்தல் போட்டியிலிருந்து விலகினார்… காங்கிரசுக்கு தாவினார் பாஜ வேட்பாளர்

பெங்களூரு:
போட்டியிலிருந்து விலகுகிறேன்… விலகுகிறேன்… என்று பா.ஜ., வேட்பாளர் அறிவித்து காங்கிரசுக்கு தாவினார்.

நாளை 3ம் தேதி கர்நாடகாவின் ராமநகரா தொகுதிக்கு நாளை இடைத்தேர்ல் நடக்க உள்ளது. இதில் மதசார்பற்ற ஜனதா தள கட்சி சார்பில், முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா போட்டியிடுகிறார்.

பா.ஜ., சார்பில், சந்திரசேகருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த அவர், தனக்கு ஆதரவாக பா.ஜ., தலைவர்கள் நிர்வாகிகள் யாரும் பிரசாரம் செய்ய வரவில்லை என குற்றம்சாட்டினார். இதனால் பரபரப்பு எழுந்தது.

இந்நிலையில் போட்டியிலிருந்து விலகுவதாக சந்திரசேகர் அறிவித்தார். தொடர்ந்து அவர் காங்கிரசில் இணைந்தார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அனிதா வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!