தேர்தல் முடிவுகள் எதிரொலி கடும் வீழ்ச்சி அடைந்த இந்திய பங்கு சந்தை

மும்பை:
இந்திய பங்கு சந்தைகள் மற்றும் ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

5 மாநில தேர்தல் முடிவுகள் எதிரொலியாகவும், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் பதவி காலம் முடியும் முன்பே திடீரென ராஜினாமா செய்ததாலும், இந்திய பங்குச்சந்தைகள் மற்றும் ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்துள்ளன.

நேற்றைய வர்த்தகம் துவங்கும்போது இந்திய பங்குச்சந்தைகளில், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 517.97 புள்ளிகள் சரிந்து 34,441.75 ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 205.25 புள்ளிகள் சரிந்து 10,488.45ஆகவும் வர்த்தகமாகின.

பங்குச்சந்தைகள் போன்று ரூபாய் மதிப்பும் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று  ஒரேநாளில் ரூ.1.10 காசுகள் சரிவுடன் ஆரம்பமாகி, ரூ.72.42ஆக வர்த்தகமாகின.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!