தேர்தல் வந்தால் சிவபக்தனாகிவிடும் ராகும்… மத்திய அமைச்சர் காட்டம்

ஐதராபாத்:
தேர்தல் வந்தால் போதும் ராகுல் சிவபக்தனாக மாறிவிடுவார் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வந்தவுடன் ராகுல் தன்னை ஒரு சிவபக்தனாக காட்டி கொள்கிறார் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கூறினார்.
தெலுங்கானா சட்டசபை தேர்தலையொட்டி நடந்த பிரசார கூட்டங்களில் அவர் பேசியதாவது:

மதத்தின் பெயரால் இன்னும் எத்தனை நாட்களுக்கு மக்களை பிரித்தாளும் முயற்சியை செய்வீர்கள். தேர்தல் என்று ஒன்று வந்ததால் ராகுல் தன்னை சிவபக்தனாக காட்டிக்கொண்டு கோயில்களை வலம் வருகிறார்.

தெலுங்கானாவில் பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் பத்தாம் வகுப்புமுதல் பிளஸ்டூவரை மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும். இம்மாநிலத்திற்கு மத்திய அரசு 20 லட்சம் குடும்பங்களுக்கு இலவச சமையல் காஸ் இணைப்பு அளித்துள்ளது.  இவ்வாறு அவர் பேசினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!