தொடரும்… தொடரும்… கைது நடவடிக்கை தொடரும்… கேரளா டிஜிபி எச்சரிக்கை
திருவனந்தபுரம்:
தொடரும்… தொடரும்… சபரிமலை விவகாரத்தில் கைது நடவடிக்கை தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு எதிராக போராட்டம், வன்முறை சம்பவங்கள் நடந்தன. சபரிமலை, பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 1,400 பேரை கைது செய்திருந்தனர்.
இது தொடர்பாக டிஜிபி லோக்நாத் பெஹரா கூறுகையில், இதுவரை 450 வழக்குகள் பதிவு செய்து, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளோம். பலரை அடையாளம் கண்டுள்ளோம். இன்னும் கைது தொடரும். சட்டப்படி எதை செய்ய வேண்டுமோ அதை செய்வோம்.
பெண்களை பாதுகாப்பாக கோயிலுக்கு அழைத்து செல்வது குறித்து போலீஸ் குழுவிடம் ஆலோசனை கேட்டுள்ளோம். அரசிடமும் கேட்டுள்ளோம். தொடர்ந்து ஆலோசனை நடக்கிறது. இறுதி முடிவெடுக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி– பத்மா மகன், திருச்சி