தொடரூந்தின் மேல் விழுந்த பரஷூட்

பரஷூட் ஒன்று தொடரூந்தின் மேல் விழுந்ததால் போக்குவரத்து தடைப்பட்ட வினோதமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

SNCF தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பான தகவல்களை பகிர்ந்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை, Versailles பகுதியில் (Yvelines) இருந்து Saint-Cyr நகரங்களுக்கு இடையே போக்குவரத்து தடைப்பட்டது. நேற்று காலை 11 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தொடரூந்தின் மேல் பரசூட் ஒன்று விழுந்துள்ளது. இதனால் தொடரூந்து நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து வழி N, U மற்றும் RER C சேவைகளும் தடைப்பட்டன. பின்னர் தீயணைப்பு படையினர் பரசூட்டை அப்புறப்படுத்தியதன் பின்னர் சேவைகள் வழமைக்குத் திரும்பின.

SNCF Réseau தெரிவித்ததில் இருந்து, இது இராணுவத்தினர் பயன்படுத்தும் பரசூட் எனவும், ஆனால் அது எங்கிருந்து வந்தது, அதை அனுப்பிவைத்தவர் யார் எனவும் அறியமுடியவில்லை என தெரிவித்துள்ளனர். சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த புகைப்படம் பலரால் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது.

Sharing is caring!