தொடர்ச்சியான தாக்குதல்களில் குறைந்தது 215 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

சிரியாவின் தென்மேற்குப் பகுதியில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்களில் குறைந்தது 215 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கண்காணிப்புக் குழு உட்பட உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் சுவெய்தா நகரில் நேற்று (25), பல தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதல்களிற்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்தநிலையில், நேற்றைய தாக்குதல்களில் குறைந்தது 221 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 127 பேர் பொதுமக்கள் எனவும் சிரிய மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

Sharing is caring!