தொண்டர்களின் கருத்துக்களை கேட்டறிய மனுக்கள் குழு அமைப்பு

சென்னை:
அ.தி.மு.க. நிர்வாகிகள் , தொண்டர்களின் கருத்துக்களை கேட்டறிய 5 பேர் கொண்ட மனுக்கள் குழுவை அ.தி.மு.க. அமைத்துள்ளது.

அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் இதுவரை 52 மாவட்டங்களாக இருந்தது. தற்போது 54 மாவட்டங்களாக மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக ஆர். லட்சுமணன் எம்.பி.யும், கொள்கை பரப்பு துணை செயலாளராக பொன்னுசாமி, விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலராக அமைச்சர் சி.வி. சண்முகம், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலராக அசோக் குமார், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலராக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி,
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலராக சேவூர் ராமச்சந்திரன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலராக தூசி கே. மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களின் கருத்துக்களை கேட்டறிய 5 பேர் கொண்ட மனுக்கள் குழுவை அ.தி.மு.க. அமைத்துள்ளது. இந்த குழுவில் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட 5 பேர் கொண்ட மனுக்கள் குழுவினர் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளிடமிருந்து பெறப்படும் மனுக்களை பெற்றுக்கொண்டு பரிசீலித்து
நடவடிக்கை எடுப்பர்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!