தொண்டர்களே வாரிசு… முதல்வர் பழனிசாமி அதிரடி

சேலம்:
அதிமுகவில் தொண்டர்கள்தான் வாரிசு என்று அதிரடித்துள்ளார் முதல்வர் பழனிசாமி.

சேலத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

எம்ஜிஆரின் கனவுகளை நனவாக்கியவர் ஜெயலலிதா. அவர் தான்இந்தியாவில் அதிக சோதனைகளை எதிர்கொண்டவர். அதிமுகவில் தான் சாதாரண தொண்டர் உயர்ந்த பதவிக்கு வர முடியும்.

ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் என யாரும் இல்லை. தொண்டர்கள் தான் வாரிசு. அதிமுகவில் தற்போது 2 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து நடத்தினாலும் நடக்க போவது கிடையாது. திமுகவில் வாரிசு அரசியல் தான் நடக்கிறது. ஆள் வைத்து உழைக்கும் கட்சி திமுக. இவ்வாறு அவர் பேசினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!