தொண்டர்கள் மனதில் இருக்கிறார் கருணாநிதி… ஸ்டாலின் உருக்கம்

சென்னை:
லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ளத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார் கருணாநிதி என்று உருக்கமாக பேசியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

இதுகுறித்து கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:

என் வாழ்வில் இன்று மறக்க முடியாத நாள், நீங்கள் எங்கே போய்விட்டீர்கள். லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ளத்தில் சிம்மாசனம் போட்டு இருக்கிறார் கருணாநிதி.

நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விட்டால் அதனை சரி செய்வது சாதாரணமானது அல்ல. இந்திய பொருளாதாரம் சீரழிந்து கொண்டிருக்கிறது. மன்னராட்சி போன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது மத்திய அரசு.

கஜா புயல் பாதிப்புக்கு ஒரு வார்த்தை கூட பிரதமர் மோடி இரங்கல் தெரிவிக்கவில்லை. அதனால்தான் மத்திய அரசை வீழ்த்த 21 கட்சிகள் இணைந்துள்ளோம். இன்னும் பல கட்சிகள் வரும். ராகுலை பிரதமராக்க முன்மொழிகிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!