தொழிலதிபர் ரன்வீருக்கு லுக் அவுட் நோட்டீஸ்

சென்னை:
தொழிலதிபர் ரன்வீர் ஷாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

சிலை கடத்தல் வழக்கில் தொழிலதிபர் ரன்வீர் ஷா வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ரன்வீர் ஷா முன்ஜாமின் கோரி மனு அளித்திருக்கும் நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இந்நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் ரன்வீர் ஷாவுக்கு சிலை கடத்தல் தடுப்புப்பிரிவினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இன்று காலை 10 மணிக்கு கிண்டியிலுள்ள அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!