தொழில்புரிய ஏற்ற மாநிலங்கள் பட்டியல்: 15வது இடத்தில் தமிழகம்

2017ம் ஆண்டுக்கான தொழில் புரிவதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 15வது இடத்தில் உள்ளது.

மத்திய நிறுவன கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையும், உலக வங்கியும் இணைந்து ஆண்டு தோறும் தொழில்புரிவதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலை வெளியிடுகிறது. மாநிலங்களுக்கு இடையே போட்டித் தன்மையை அதிகரிக்கவும், முதலீடுகளை ஈா்க்கவும் தொழில்புரிவதற்கான சூழலை மேம்படுத்தவும் இந்த பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான பட்டியல் செவ்வாய்க் கிழமை வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் ஆந்திரா மாநிலம் முதல் இடத்தை பெற்றுள்ளது. 98.42 மதிப்பெண்கள் பெற்று ஆந்திரா முதல் மாநிலமாக திகழ்கிறது. அதனைத் தொடா்ந்து தெலங்கானா மாநிலம் 2வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்கள் சோ்ந்து முதல் இடத்தில் இருந்த நிலையில் தற்போது அவை அடுத்தடுத்து முதல் இரண்டு இடங்களை பெற்றுள்ளன.

மேலும் இந்த பட்டியலில் 95.93 மதிப்பெண்களுடன் தமிழகம் 15வது இடத்தில் உள்ளது. 3வது இடத்தில் ஹரியானா மாநிலமும், நான்காவது இடத்தில் ஜாா்கண்ட் மாநிலமும், 5வது இடத்தில் குஜராத் மாநிலமும் இடம் பெற்றுள்ளன.

Sharing is caring!