தொழில் வாய்ப்புகளை வழங்க ஜப்பான் அனுமதி
வௌிநாட்டுப் பிரஜைகளுக்கு தமது நாட்டில் தொழில் வாய்ப்புகளை வழங்க ஜப்பான் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இதனூடாக 5 வருட விசாவில் வௌிநாட்டுப் பிரஜைகள் ஜப்பானில் தொழில் புரிவதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தொழிலாளர்களுக்கு குடும்பத்துடன் ஜப்பானில் வாழ்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுள்ளது.
நாட்டில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S