தோல்வி… மத்திய அரசின் தோல்வி… முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குற்றச்சாட்டு

புதுடில்லி:
தோல்வி… தோல்வி… பிரதமர் மோடி தலைமையிலான அரசு தோல்வியடைந்துள்ளது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக குற்றம் சாட்டி உள்ளார்.

விவசாயம், பொருளாதாரம் மற்றும் பக்கத்து நாடுகளுடன் நட்புறவில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டினார்.

காங்., மூத்த தலைவர் கபில்சிபில் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:

ரூபாய் நோட்டு வாபஸ் மற்றும் ஜி.எஸ்.டி., அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்டதால், நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் தொழில் துறையில் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

விவசாயிகளின் பிரச்னை, பொருளாதாரம் மற்றும் பக்கத்து நாடுகளுடன் நட்புறவில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தோல்வியடைந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் மோடியின் தலைமையிலான ஆட்சி குறித்து கபில் சிபிலின் புத்தகம் விளக்குகிறது.

வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை கூறி கடந்த 2014 லோக்சபா தேர்தலில் வெற்ற பா.ஜ., அரசு அதனை நிறைவேற்ற தவறிவிட்டது. இவ்வாறு அவர் கடுமையாக குற்றம் சாட்டி உள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!