நண்பனை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டுகள் சிறை

துபாய்:
துபாயில் தன் நண்பனை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வளைகுடா நாடான, ஐக்கிய அரசு எமிரேட்சின் துபாயில் வேலை பார்த்து வந்த மூன்று இந்தியத் தொழிலாளர்கள் இடையே, 2017ல், குடி போதையில் தகராறு ஏற்பட்டது.

இதில், ஒருவரைக் கொன்று, மற்றொருவருக்கு காயம் ஏற்படுத்தியதாக, 26 வயது தொழிலாளிக்கு, 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மன்னிப்பு கேட்டு அந்தத் தொழிலாளி, முறையீடு செய்திருந்தான்.

அதை நீதிமன்றம் ஏற்க மறுத்து 15 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும், அதன் பின் நாடு கடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!