நண்பனை கொன்ற பயங்கரவாதிகளை வதம் செய்ய வேலையை விட்டு நாடு திரும்பி நண்பர்கள்

ஸ்ரீநகர்:
நண்பனை கொன்ற பயங்கரவாதிகளை வதம் செய்ய செய்து கொண்டிருந்த பணியை விட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளனர் நண்பர்கள்.

காஷ்மீரில் ராணுவ வீரரை கொன்ற பயங்கரவாதிகளை பழிவாங்குவதற்காக அவரது நண்பர்கள், சவுதியிலிருந்து சொந்த ஊர் திரும்பியுள்ளனர். காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள மெந்தார் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அவுரங்கசீப். ராணுவத்தில் பணிபுரிந்த அவர், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த போது, ஜூன் 14ம் தேதி பயங்கரவாதிகள் அவரை கடத்தி சென்று சுட்டு கொன்றனர்.

இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த, அவுரங்கசீப்பின் நண்பர்கள் 50 பேர், தனது நண்பர் உயிரிழந்த தகவலை அறிந்தவுடன் உடன் தங்களது வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊர் திரும்பினர். கொலைக்கு காரணமான பயங்கரவாதிகளை பழிவாங்குவதே தங்களது லட்சியம் எனக்கூறியுள்ளனர்.

இது குறித்து அவுரங்கசீப்பின் நண்பர்கள் சிலர் கூறியதாவது: எங்களது சகோதரர் அவுரங்கசீப் கொல்லப்பட்ட செய்தி கேட்டதும், சவுதியிலிருந்து எங்களது பணியை ராஜினாமா செய்து சொந்த ஊர் திரும்பியுள்ளோம். எங்களது நண்பர் இறப்பிற்கு காரணமானவர்களை பழிவாங்க ராணுவம் மற்றும் போலீசில் சேர உள்ளோம். இது ஒரே நாளில் செய்ய முடியாது என்பது தெரியும்.

இருப்பினும் இதனை சமாளிப்போம். 50 பேர் சொந்த ஊர் திரும்பியுள்ளோம். எங்களது ஒரே குறி, அவுரங்கசீப்பை கொன்றவர்களை பழிவாங்குவது ஒன்றே. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!