நல்லதல்ல… நல்லதல்ல… ஜனநாயகத்திற்கு நல்லதல்ல! துணை ஜனாதிபதி அட்வைஸ்

அமராவதி:
நல்லதல்ல… நல்லதல்ல… ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்று துணை ஜனாதிபதி அறிவுறுத்தி உள்ளார்.

அரசியல் கட்சிகள் அளிக்கும் ‘இலவச’ வாக்குறுதிகள் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

ஆந்திர மாநிலம் அமராவதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:

தேர்தல் காலங்களில், அரசியல் கட்சிகள் ‘இலவச’ வாக்குறுதிகளை தெரிவிக்கின்றன. அது சாத்தியமா, நிறைவேற்ற முடியுமா எனக்கூட ஆலோசிப்பது இல்லை. அவர்களால் அதை நிறைவேற்ற முடியாவிட்டால், யார் அதற்கு பொறுப்பு. மாநிலத்தின் கடன், வரி வருவாய், தேவைப்படும் நிதி குறித்து முதலில் அரசியல் கட்சிகள் ஆலோசிக்க வேண்டும்.

அதனை எப்படி நிறைவேற்ற போகிறோம் என்பதற்கான திட்டத்தை தயாரிக்க வேண்டும். இது தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கும் பொருந்தும். இவ்வாறு அவர் பேசினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!