நல்ல திட்டம்… எட்டு வழி சாலை நல்ல திட்டம்… முதல்வர் சர்டிபிகேட்

சேலம்:
நல்ல திட்டம்… நல்ல திட்டம்… எட்டு வழி சாலை திட்டத்திற்கு சர்டிபிகேட் கொடுத்துள்ளார் முதல்வர்.

சேலம் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓமலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:

சேலம் 8 வழிச்சாலை திட்டம் நல்ல திட்டம். நாட்டின் 2வது பசுமைச்சாலையாக அமையவுள்ளது. வெளிநாடுகளை போல் நமது மக்களும் சலுகைகளை பெற வேண்டும். 11 சதவீத மக்கள் மட்டுமே இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

எதிர்ப்புகளையும் சமாளித்து நல்ல திட்டம் கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்படும். யாரையும் பாதிப்புக்குள்ளாக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!