நவாஸ் ஷெரீஃபை விடுவிக்குமாறு பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபை விடுவிக்குமாறு பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஊழல் செய்தமைக்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்துள்ள நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அவரது மகள் மரியம் ஆகியோருக்கு கடந்த ஜூலை மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்கெதிராக மேன்முறையீடு செய்யப்பட்டிருந்ததுடன், தமக்கெதிரான குற்றங்களையும் அவர்கள் நிராகரித்திருந்தனர்.

இந்த நிலையில், இவர்களது குற்றங்களை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புபட்ட, லண்டனிலுள்ள 4 ஆடம்பர சொத்துக்கள் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு குறுகிய காலத்திற்கு முன்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இது அரசியல் பழிவாங்கல் என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Sharing is caring!