நவ.15ம் தேதி அரசு பணியாளர்கள் ஸ்டிரைக்… 3 கட்ட போராட்டம் நடக்கிறது

மதுரை:
நவ.15ம் தேதி  அரசு பணியாளர் சங்கத்தினர் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நவ., 15ல் நடக்கும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில், அரசு பணியாளர் சங்கம் பங்கேற்கிறது.

அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை அரசு அமல்படுத்த வேண்டும்; 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்; அங்கன்வாடி, சத்துணவு, ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, மூன்று கட்ட போராட்டங்களில், பணியாளர் சங்கம் ஈடுபட உள்ளது.

அக்டோபர் மாதம் பிரசார இயக்கம், நவ., 10ல், திருச்சியில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு, நவ.,15ல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட பணியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது..

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!