நாகையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

நாகப்பட்டினம்:
இன்று நாகையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகை வருவாய் கோட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தமிழக கடலோர பகுதிகளில் வலுவான காற்றழுத்த தாழ்வு நிலவுவதாலும், கனமழை காரணமாகவும் புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை 23ம் தேதி நடக்கவிருந்த அண்ணா பல்கலை., தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடக்கும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தஞ்சை மன்னர் சரபோஜி மன்னர் கல்லூரியிலும் இன்று நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!