நாகை, திருவாரூர் மாவட்டத்தில் 6 ஒன்றியத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

நாகப்பட்டினம்:
நாகை, திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 6 ஒன்றிய பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருக்குவளை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஒன்றியங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார். இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் 3 ஒன்றிய பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

முத்துப்பேட்டை, கோட்டூர், திருத்துறைப்பூண்டி ஒன்றிய பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் நிர்மல்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதவாது: மேற்குறிப்பிட்ட ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் புயல் நிவாரண முகாம் செயல்பட்டு வருவதால் அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!