நாகை மீனவர்கள் 7 பேரை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை

நாகை:
நாகை மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாகை அக்கரைப்பேட்டை டாட்டா நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(42). மீனவர். இவருக்கு சொந்தமான பைபர் படகில் சீனிவாசன் மற்றும் அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த கந்தசாமி(25), கோபாலகிருஷ்ணன்(25), ஆனந்தபாபு(23), நிலவரசன் (21), வீரசெல்வன்(30), பிருதிவிராஜன்(20) ஆகிய 7 பேரும் கடந்த 7ம் தேதி நாகையிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

வேதாரண்யம் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 20 நாட்டிங்கல் கடல் மைல் தொலைவில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சிறிய ரக கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் அவர்களின் படகை சுற்றி வளைத்தனர்.

பின்னர் எல்லை தாண்டி வந்ததாக கூறி சீனிவாசன், கந்தசாமி, கோபாலகிருஷ்ணன், ஆனந்தபாபு, நிலவரசன், வீரசெல்வன், பிருதிவிராஜன் ஆகிய 7 பேரையும் சிறைபிடித்தனர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் திரிகோணமலையில் உள்ள இலங்கை கடற்படை முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து நாகை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் மீனவ கிராம மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!