நாங்க தான் வெற்றி பெறுவோம்… பாஜ அமித்ஷா சூளுரை

ஜெய்பூர்:
நாங்கதான்… நாங்கதான் வெற்றி பெறுவோம்… என்று பாஜ தேசிய தலைவர் தெரிவித்துள்ளார். என்ன விஷயம் தெரியுங்களா?

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் பா.ஜ., தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

தேர்தல் வரும்போதெல்லாம் எதிர்கட்சிகள் அவதூறு பரப்புவதை கொள்கையாக கொண்டுள்ளனர். மாட்டிறைச்சி விவகாரத்தில் பா.ஜ., மீது அவதூறு பரப்புகின்றனர். வரும் தேர்தலிலும் எதிர்கட்சிகளின் இத்தகைய முயற்சியை முறியடித்து பா.ஜ., அபார வெற்றி பெறும்.

காங்., கட்சிக்கு ஓட்டு வங்கி குறித்தே கவலை. நாட்டைப்பற்றிய கவலை இல்லை. மனித உரிமை மற்றும் நாட்டின் பாதுகாப்பு பற்றி காங்., அக்கறை கொள்வதில்லை. அனைத்து பயங்கரவாத தாக்குதல்களும், குண்டு வெடிப்புகளும் காங்., ஆட்சியில் தான் நடந்துள்ளன.

வங்க தேசத்தவர் ஒருவர் கூட இங்கு தங்கியிருக்கக்கூடாது. எதிர்கட்சிகளின் எதிர்ப்பை சமாளித்து வங்க தேசத்தவர்களை இந்தியாவை விட்டு விரட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!