நாடாளுமன்றத் தேர்தலில் கமல் போட்டிடுகிறார்..!

சென்னை:
உறுதி… நாடாளுமன்றத் தேர்தலில் கமல் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவது உறுதி என நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து பரபரப்பாக மக்கள் பணியை செய்து கொண்டிருக்கிறார். கடந்த ஒரு மாதமாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்கள் குறைகளைக் கேட்டறிந்து வருகிறார்.

அதனால் மக்கள் மனதில் கமல்ஹாசனுக்கு நல்ல பெயர் கிடைக்க ஆரம்பித்துள்ளது. இதற்கிடையில் இன்னும் 6 மாத காலத்தில் நாடளுமன்றத் தேர்தல் வர இருப்பதால் மக்கள் நீதி மய்யம் அதில் போட்டியிடுமா என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.  இந்த சந்தேகத்தை போக்கியுள்ளார் கமல்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையகத்தில் கமல் தலைமையில் செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் கூட்டம் நடந்தது. இதில் கட்சி மேல்மட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின் பேசிய கமல் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கலந்து கொள்ளும். வேட்பாளராக நானும் தேர்தலில் நிற்கிறேன் எனவும் அறிவித்தார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!