நாட்டின் ஆகாய எல்லையில் நுழைந்ததனால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது

சிரியா நாட்டு போர் விமானத்தின் மீது தாக்குதல் நடாத்தியுள்ள இஸ்ரேல், தங்கள் நாட்டின் ஆகாய எல்லையில் நுழைந்ததனால் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவித்தல் விடுத்துள்ளது.

ஏவுகணை மூலம் அந்த விமானத்தை இஸ்ரேல் தாக்கியுள்ளது. இதில் நடுவானில் விமானம் வெடித்து சிதறி கீழே விழுந்ததை அந்த பகுதி மக்கள் நேரில் கண்டுள்ளனர்.

சிரியாவில் இருந்து வரும் பத்திரிகைகளும் இஸ்ரேல் செய்தி நிறுவனமும் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

விமானத்தில் இருந்த விமானி தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாக வில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

Sharing is caring!