நாட்டிய விழாவில் மேடையில் மின்னுது எல்.இ.டி., திரை

மாமல்லபுரம்:
நாட்டிய விழா மேடை பின்னணியில் எல்.இ.டி., திரை உபயோகப்படுத்தப்படுகிறது.

மாமல்லபுரத்தில் ஆண்டு இறுதியில் குவியும் சர்வதேச பயணிகளுக்காக தமிழக சுற்றுலாத்துறை நாட்டிய விழா நடத்துகிறது. கடந்த 23ம் தேதி இந்த விழா தொடங்கியது. வரும் ஜன., 20 வரை, நாள்தோறும் மாலையில் நடக்கிறது.

விழா மேடை பின்னணியில், ‘இந்திய நாட்டிய விழா’ என, குறிப்பிடப்பட்ட பிளெக்ஸ் மட்டுமே எப்போதும் இருக்கும். தற்போது, ஒளிரும் பிரமாண்ட எல்.இ.டி., திரை அமைக்கப்பட்டுள்ளது. பதிவாகும் நடன நிகழ்வுகள் பிரமாண்ட திரையிலும் ஒளிர்ந்து தொலைவில் உள்ள பார்வையாளர்களையும் கவர்கிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!